கடத்தூர் ஜெயராமன்

வசந்தமே வருக வருக

இனிய உணர்வோடு

கனியாய் சித்திரை வசந்தமாய் வருகிறது

வாருங்கள் வாவென கூடி அழைப்போம்

சனநாயகம் வாழ விருந்தாளியாய்

வேட்பாளர்கள்

 

வாக்குகளை பெற வீடு வரும் நேரம்

மக்கள் விழிப்புணர்வு

பெற தேர்தல் ஓர் வசந்தம்

வாக்குகள் தரும் அரசுரிமை அது

வீட்டின் வாயிலில் அவர் பெற நீவீர் தர

 

கோட்டையாளவர் மக்கள் நலமனைத்தும்

வீட்டையடையின் சனநாயக தேர்தல் வசந்தம்

அரசு தரும் இலவசம்

தருக வாக்கு எனும் ஓலம்

அடிமைகள் வாழும் நாட்டில் அரசன் முழங்கும் முரசம்

கட்சியில் இருந்து தருவதானால் வந்த வழி கணக்குகள் என்ன

கசானாவில் எனில் அது மக்கள் உரிமை தந்த பின்பே

 

ஆண்டான் அடிமை மேலோன் கீழோன்

வேண்டான் விரும்பியவன் எனும்

வேற்றுமையில்லை

ஆள்பவன் எல்லாம் அரசனுமில்லை

அரசியுமில்லை அனைத்தும் துறந்தவரில்லை

மக்கள் வேண்டியபடி

விடியல் பெற வந்த தேர்தல் ஓர் வசந்தம்

 

நினைத்தவரெல்லாம் உனையாள விடாத சனநாயக உரிமைப் படி

உனைத் தேடி சலுகைகள் உன்னில்லம் வரவோர் அரசைப் பிடி

வந்து விட்டார்கள் வாசல் படியென வாக்களித்துவிட்டால்

வந்துவிட்டது ஐந்து வருட வாழ்வின் நட்டம்

ஜந்துக்கள் நாமல்ல சனநாயக பந்துக்கள்

 

சந்திக்க வந்த தேர்தலில் சரியாக

தீர்ப்பு வழங்கிட முந்துங்கள்

வந்த தேர்தல் தரும் நல் வசந்தம்


கடத்துர் ஜெயராமன்

பிப்ரவரி மாத வானவில் மின் இதழில் வெளிவந்த கவிதை

Comments

Popular posts from this blog