இசை என்னும் இன்ப வெள்ளம்
நேர்காணல் : தா.தெய்வானை
உதவி : இரா.பவித்திரா
கேள்வி: வணக்கம் தியாகராஜன் இந்த மடத்துக்குளம்
பகுதியி ல் தம்பதியாய் இசைப்பயணம் நீங்கள் மட்டும்தான்.அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
பதில்: நான் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன் நாதசுர ஈடு பாட்டால் சின்னச் சின்னக் கச்சேரிகளுக்கு உதவியாளராகப் போய் வந்தேன் பின்பு கரூரில் உள்ள அரசு இசைப்பள்ளியில் மூன்று ஆண்டு கள் டிப்ளமா எனும் பட்டயப்படிப்பு படித்து முறையான அரசு சான்றிதழ் பெற்று வெளியில் வந்தேன். பின்பு அனுபவம் மிக்க கலைஞர் களுடன் சிலவருடங்கள் வாசித்தேன் பின்பு அறிமுகம் ஆக ஆக நான் கச்சேரி செய்ய ஆரம்பித்தேன்
கேள்வி: தனியாகக் கச்சேரி ஒப்பந்தம் செய்தால் உங்களுக்குத் துணையாக யாரை அழைப்பீர்கள்?
பதில்: என் உறவினர்கள் என்னுடன் படித்த சக மாணவர் இவர்களை வெளியூரில் இருந்து அழைத்துக் கொள்வேன்
பதில்: எங்கள் பரம்பரைத் தொழிலே இதுதான்.மூன்று தலை முறையாக எல்லோரும் இதே தொழில்தான். கொஞ்சம் மாறி என் தந்தை மில் தொழிலுக்குப் போனார் ஆனால் நான் என் பரம்பரைத் தொழிலைக் கற்றுக் கொண்டேன்.
கேள்வி: எந்த விழாக்களில் வாசித்தால் மனநிறைவு ஏற்படுகிறது?
பதில்: கோயில் விழாக்களில் வாசிப்பதில்தான். ஏனென்றால் கோயில் விழாக்களுக்கு வருபவர்கள் அமர்ந்து கச்சேரியைக் கேட்டு ரசிப்பார்கள் கரவொலியும் பாராட்டும்
கிடைக்கும். உற்சாகப் படுத்துவார்கள. கல்யாண வீடுகளில் மக்களுக்கு ரசிக்க நேரமில்லை.
கேள்வி: எந்த மாதிரி இசையை வாசிப்பீர்கள் ?
பதில் கோயில்களில் கர்நாடக சங்கீதம் வாசிப்போம்.பக்திப்பாடல்கள் வாசிப்போம். திருமண வீடுகளில் பெரும்பாலும் திரைப்படப் பாடல்களைத்தான் விரும்புகிறார்கள்.
கேள்வி: கர்நாடக சங்கீதம் என்கிறீர்கள் இராகங்கள் பற்றித் தெரியுமா? உங்கள குரு யார்?
பதில்: தெரியும் . அது பற்றித் தான் பள்ளியில் படித்தோம் எனக்கு இரண்டு வருடங்கள் குருவாக இருந்தவர் டி.ஜி.காளிதாஸ் அவர் ஓய்வு பெற்றபின் திருக்கடையூர் அபிராமி கோயிலில் நாதசுரத் திருப்பணி செய்து வருகிறார். மூன்றாம் வருடம் சீர்காழி கந்தசாமி குருவிடம் பயின்றேன் .
கேள்வி: உங்கள் துணைவியாரிடம் பேசலாமா? சொல்லுங்கள் சுகந்தி.
பதில்: நான் பி,காம் ,சி.ஏ படித்திருக்கிறேன் ஒட்டன்சத்திரத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். சத்திரப்பட்டி எங்கள் சொந்த ஊர். ஒரு விழாவில் இவர் நாதஸ்வரம் வாசித்ததைக் கேட்டேன் பிடித்துப்போய் இவரையே திருமணம் செய்வதென்று முடிவெடுத்தேன் .அத்மட்டுமல்ல இவர் எனக்கு தாய் மாமா பையன்தான் எங்கள் வீட்டிலும் நாலு தலை முறையாய் நாதசுரம் வாசிப்பது பரம்பரைத் தொழில்தான்.
பதில்: என் கணவர்தான் எனகுரு. கொரோனா சமயத்தில் எந்த க் எச் சேரியும் இன்றி வீட்டில் சும்மாதான் இருந்தார் . அந்த சமயத்தில் இவரிடம் நான் கற்றுக் கொண்டேன்.
பதில்: 2022இல் மடத்துக்குளம் வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் தான் முதன்முதலில் சேர்ந்து கச்சேரி செய்தோம்.
கேள்வி: தியாகராஜன் ஏதாவது விருதுகள் பெற்றதுண்டா?
பதில்: கொமரலிங்கத்தில் ஒரு திரு விழாவில் கச்சேரி முடிந்தபின் ஊர் மக்கள் சேர்ந்து "கலை வேந்தன்" என்ற பட்டம் அளித்தார்கள் கோயமுத்தூரில் மென் பொருள் பூங்கா (tidle park) திறப்பு விழாவின் போது கலைஞர் அய்யா முன்னிலையில் வாசித்து அவரது பாராட்டைப் பெற்றேன்
பதில்: கொரோனா சமயத்தில் இரண்டாயிரம் ரூபாய் ஒரு தடவை கிடைத்தது. இந்த இசையை உடம்பில் தெ ம் பு இருக்கும் வரை தான் வாசிக்க முடியும். மூச்சு இழுத்து வாசிக்க வேண்டும் அல்லவா? அதனால் வயதான கலைஞர்களுக்கு அரசின் உதவித் தொகை மாத ஊதியமாக ஏதாவது கிடைத்தால் நல்லதுதான்.
பதில்: டிரம்ஸ் சிவமணியுடன் ஒருதடவை குழுவில் வாசித்துள்ளேன் இசை ஞானி இளையராஜா வின் ஊரான பண்ணைப்புரத்தில் வாசித்தேன் இந்தப் பகுதியில் பெண்கலைஞர்கள் யாரும் இல்லையல்லவா ஆகையால் என் துணையாரைப் பாராட்டும் போது ஓர் ஆசிரியராக நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன் .
பதில் தஞ்சாவூர் நரசிங்கன் பேட்டை,மயிலாடுதுறை போன்ற ஊர்களில் இருந்து வரவழைப்போம்
பதில்: கனடாவில் .தங்கியிருந்து வாசிக்க கோயில் ஒப்பந்தம் ஒன்று கிடைத்தது.என் துணைவியார் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். ஆறுமாதம் கழித்து வந்தால் இங்கே நம் மக்கள் நம்மை மறந்து விடுவார்கள் என்பதால் மறுத்து விட்டோம்.
பதில் : எதிர் விமர்சனங்கள் வருவதுண்டு நான் அதைப் பொருட்படுத்துவதில்ல பாராட்டை மட்டுமே தன்னம்பிக்கையாக எடுத்துக்கொள்கிறேன்
பதில்: இல்லை.இப்போதைக்கு நான் மட்டும்தான் எதிர்காலத்தில் உருவானால் மகிழ்ச்சி அடைவேன்.
பதில்: இதை வலிய திணிக்க முடியாது.விரும்பி வந்தார்களானால் கற்றுத் தருவோம்.
பதில்: பெண்கள் எத்தனையோ துறைகளில் சாதிக்கிறார்கள் இம்மாதிரி கலைகளிலும்
முன்வரவேண்டும் பெண்தானே என்று அலட்சியம் செய்யாமல் மக்கள் வரவேற்பு தர வேண்டும். பாரம்பரிய கலைகளை மக்கள் வாழ வைக்க வேண்டும்.
நன்றி வணக்கம்.

Comments
Post a Comment