கவிஞர் இளையவன் சிவா முக நூலில் எழுதிய நூல் அறிமுகம் உயிருக்குள் தாகம் தேவயானி / கவிதைத் தொகுப்பு / வெளியீடு செம்மை உடுமலை முதல் பதிவு செப்டம்பர் 2011 / இரண்டாம் பதிப்பு ஜனவரி 2024 / பக்கம் 80 / விலை ரூ 80 வளைக்கரங்கள் வாழ்வை நேசிக்கத் துவங்கினால் கலையின் வழியே காட்சிகள் புலப்பட்டு அலையின் முயற்சி என கவிதைகள் விளைந்து மனதினை நிறைக்கும். மொழியின் மீதான நேசத்தின் நீட்சியில் உலகின் வழிகளை ஒருங்கிணைத்து இயற்கையின் வளங்களை பாதுகாக்கும் எண்ணத்தை விதைக்கும் நேசச் சொற்களின் அணிவகுப்பில் வந்து விழுகின்றன வார்த்தை அருவிகள். தமிழ் மீதான தணியாத காதலை தன்னம்பிக்கை நிறைத்து தரணியை ஆண்டிட இன்னொரு பிறப்பெடுக்க வைக்கும் ஆசையின் தூண்டலை இல்லறத்தை நல்லறமாக்கிடத் துடிக்கும் இளமையின் எண்ணங்களை நாளும் பொழுதும் நிம்மதி கூட்டும் நிலாவின் முற்றத்தை தன்னை வளர்த்தெடுத்த நதியின் வாழ்க்கைப் போக்கை இயற்கை மீதான நேசத்தை என உயிருக்குள...