வெள்ளகோவில் திவாகர் கவிதை
-------------------------------------------
குருவியாய் பிறந்திருந்தால் மரத்தில்
கூடு ஒன்று கட்டி இருப்பேன்
மனிதனாய் பிறந்ததால்
மரத்தில் கூடு கட்ட
அறிவில்லை
அடைய மண் குடிசையோ
உடையோ ஏதுவாகினும்
உண்ண கூழோ களியோ என்
எண்ணப்படி வாழ
இசைந்த பெற்றோர்
வாழ கோபுரமென கூட மாடம்
விரைந்து செல்ல தேரென கார்
கட்ட கரை வேட்டி
பட்டு பீதாம்பரம்
கிட்ட வந்து பேசிடுவர்
பெண் வீட்டார்
பள்ளி பருவம் கழிந்தது
துள்ளி விளையாடும்
மனமழிந்து
தாய் தந்தை பரிசளித்த செந்நிற
பிஞ்சு பாதம்
தேய்ந்து போயும் இளைப்பாற களைப்பாற
ஓய்ந்துட்கார ஓர் கூடுமில்லை
உறுதி கூறுகிறேன் என்றாவது
ஒருநாள் நானும் ஓர் கூடு கட்டுவேன்
ஒருத்தி என்னை நம்பி வந்தவளுக்காக
கருத்தால் என் மனதை கருக்கியவர்களுக்காகவும்
மனமும் மாறுமோ தகப்பன் ஆயின்
மனமாடியடங்கிப்பின்
ஆறு அடியும் சொந்தமில்லை
பின் ஏதுமாகிப்பின் என்ன பயன்
Comments
Post a Comment