தோழன் ராசா கவிதை   ----

நீயா நானா

அதிக வலிமை

உனக்கா எனக்கா

உளி உரும

கர்ஜித்தது தூரிகை

செதுக்கலால் புது

உருவம் உலகுக்கு

அளிக்கிறேன்

வண்ணங்களால்

எண்ணங்களை

செதுக்குகிறேன்

இரும்பு கரம் கொண்டு அல்லதை

அகற்றுகிறேன்

நளினமாய் உயிர்ப்பை தத்துருபிக்கிறேன்

எனது வன்மையில்

மென்மையுண்டு

எனது மென்மையுள்

உண்மையுண்டு

வண்ணங்கள் இல்லையேல்                                                                                                                                        

நீ  வெறுமை

சுத்தியலில் சக்தி இன்றேல்                     

நீ வெறும் சவம்

கல்லுக்கும் உயிர் கொடுப்பேன் நான்

வெள்ளைக்கும் வசந்தம் கொடுப்பேன் நான்

நாசியைத் துளைப்பவன் நீ

புழுதியைக் கிளப்புவாய் நீ

புத்தர் காலத்திலே

பிரசித்தம்

மொழிக்கு முன்னர் தோன்றியவன் நான்

நான் பல்லவனின்

ஆயுதம்

சோழனின் பெருமிதம்

வெற்றி முழக்கங்கள்

வெற்றுக் கூச்சல்கள்

குற்ற சாட்டுகள்

கூப்பாடுகள் எந்த

சலனமும் இன்றி

இவற்றை எல்லாம்

பதிவு செய்து கொண்டு இருந்தது

பேனா......

----------------------------------------------------------------------

வானவில் மின் இதழ்  பிப்ரவரி 2024  இதழில் இடம் பெற்ற கவிதை

Comments

Popular posts from this blog