சேலம் சௌ.காவியா கவிதை
நட்பு
*********
மனதோடு
காலமெல்லாம்
மலர்ந்தே
இருக்கும் பூ
பாசமும்
அன்பும்
பிணைத்துத்
தொடுத்த பூ
நெஞ்சிலே
நிறைந்து
நினைவினில்
வளரும் பூ
உற்ற
உறவுகளுக்கும்
மேலே நின்ற
பூ
உயிருக்குள்
கலந்த
உன்னதமான
நட்பு
வார்த்தைகளால்
சொல்ல
முடியாது
வரைவதற்கு
வடிவம்
கிடையாது
எண்ணங்களை
எழுத
இயலாது
புரிந்து
கொண்டால்
பொய் சொல்ல
வராது
தொலைவில்
இருந்தாலும்
நினைவு
அழியாது
காலம்
கடந்தாலும்
கண்ணை
விட்டு மறையாது
உண்மையான
நட்பு
உயிர்
போகும் வரை பிரியாது
வானவில் மின் இதழ் பிப்ரவரி 2024 இதழில் இடம்பெற்ற கவிதை
Comments
Post a Comment